News March 21, 2025

திருப்பூரில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

image

திருப்பூர் செரங்காடு பகுதி சேர்ந்தவர் பிரகாசம், பனியன் நிறுவன தொழிலாளி. இவர் 13 வயது சிறுமிக்கு கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி பாலியல் தொந்தரவு கொடுத்தார். இந்த வழக்கு விசாரணை  திருப்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. பிரகாசத்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

Similar News

News September 20, 2025

திருப்பூர்: கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லையா?

image

திருப்பூர் மக்களே… மத்திய அரசு அறிவிப்புப்படி, LPG கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லை என்றால் இனி கவலை வேண்டாம்.<> NPCI<<>> என்ற இணையதளத்தில் சென்று, Consumer கிளிக் செய்து, BASE என்பதை தொட்டவுடன், ஆதார் எண்ணை பதிவு செய்து, Seeding-ஐ தேர்வு செய்து ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட சரியான பேங்கை உள்ளீடு செய்து வங்கி கணக்கு எண்ணை பதிவு செய்யவும். இனி பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக மானியம் செலுத்தப்படும். SHARE பண்ணு

News September 20, 2025

திருப்பூர்: 10th போதும்.. ரூ.25,000 சம்பளத்தில் வேலை!

image

திருப்பூரில் செயல்பட்டு வரும், தனியார் நிறுவனத்தில் உள்ள STORE ASSISTANT பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும். இந்த பணிக்கு முன் அனுபவம் தேவையில்லை. இதற்கு 10ம் வகுப்பு முடித்தவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

News September 20, 2025

திருப்பூர் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

image

திருப்பூரில் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக, ரயில்வே துறையுடன் இணைந்து, தபால் நிலையத்தின் வாயிலாக ரயில் டிக்கெட் முன்பதிவு பெறும் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் காந்தி நகர் தபார் நிலையத்தில் இந்த சேவை துவங்கப்பட்டுள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவு, இதன் மூலம் தட்கல் முன்பதிவு சேவைகளை எளிதாக பெறமுடியும். மேலும் விபரங்களுக்கு 0421 – 2486288 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!