News March 19, 2024
திருப்பூரில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் அதிரடி

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள சூழ்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் 64 குழுக்கள் தேர்தல் விதிமுறைகள் தொடர்பான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.2,10,310-ஐ இன்று தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
Similar News
News August 5, 2025
திருப்பூரில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை (ஆக.6) காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை, திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, கருவம்பாளையம், ஆலங்காடு, கல்லப்பாளையம், வெங்கடாசலபுரம், கோழிப்பண்ணை ஒரு பகுதி, அணைப்பாளையம், ராயபுரம், மிலிட்டரி காலனி, பெரியாண்டிபாளையம், கொங்கனகிரி, கோவில், ரங்கநாதபுரம், காலேஜ் ரோடு, ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News August 5, 2025
திருப்பூர் மாநகரில் இன்று இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

திருப்பூர் மாநகரில் இன்று இரவு பாதுகாப்பு நடவடிக்கையாக ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு எண்கள் மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர தேவைக்கு நேரில் உள்ள அதிகாரிகளை தொடர்புகொள்வதோடு, 100 எண்ணையும் அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 4, 2025
திருப்பூரில் மாதர் மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் கே வி ஆர் நகர் பகுதியில் தனியார் பள்ளியில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், தமிழ்நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகளில் மாணவிகள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மாணவர் சங்கம் மற்றும் வாலிபர் சங்கத்தினர் செல்லம் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனார்.