News September 26, 2025
திருப்பூரில் தீ குளித்த வாலிபர் உயிரிழப்பு

திருப்பூர் 15 வேலம்பாளையத்தை அடுத்த காவிரி நகரச் சேர்ந்தவர் பழனிச்சாமி. தையல் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த இவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து கடந்த 20ஆம் தேதி வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். உடல் கருகிய நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு உயிர் இழந்தார்.
Similar News
News January 10, 2026
திருப்பூர் மக்களே: இனி அலைச்சல் வேண்டாம்!

திருப்பூர் மக்களே, பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்.
1). ஆதார் : https://uidai.gov.in/
2). வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3). பான் கார்டு : incometax.gov.in
4). தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5). திருப்பூர் மாவட்ட அறிவிப்புகளை அறிய: https://tiruppur.nic.in/ta/
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News January 10, 2026
உடுமலை அருகே விபத்து

ஆனைமலையில் இருந்து உடுமலை நோக்கி மினிவேன் ஒன்று வந்து கொண்டு இருந்தது. அப்போது எதிரே வந்த பைக் மீது மினிவேன் மோதியது. இவ்விபத்தில் பைக்கில் வந்த கொடுங்கியத்தைச் சேர்ந்த தினகரன், வேதஸ்ரீ ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள், கோவை GH-ல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், வேதஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News January 10, 2026
திருப்பூர்: ஆன்லைனில் பணம் அனுப்புபவரா நீங்கள்?

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்பி வருகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!


