News December 16, 2025
திருப்பூரில் சோகம்: கணவன் இறந்த துக்கத்தில் தற்கொலை!

திருப்பூர் கருமாரம்பாளையம், ராமசாமி லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி(78). இவரது மனைவி சுப்புலட்சுமி(72). இந்நிலையில் கோவிந்தசாமி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் சுப்புலட்சுமி மன உளைச்சலில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வடக்கு போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 22, 2025
திருப்பூரில் அதிரடி கைது!

திருப்பூர் மங்கலம் ரோடு பாரப்பாளையம் அருகே, மத்திய போலீசார், சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த ரக்ஹிதாஸ் என்ற நபரை சோதனை செய்தனர். சோதனையின் போது அவரிடம் குட்கா பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

திருப்பூர் அருகே விரட்டி விரட்டி கடித்த வெறிநாய்!

திருப்பூர், உடுமலை, போடிப்பட்டியில் ஏராளமானோர் வசிக்கின்றனர். இந்நிலையில் நேற்று உச்சி மாகாளியம்மன் கோவில் பகுதியில் வெறிநாய் ஒன்று சுற்றித்திரிந்துள்ளது. அந்த தெருநாய் சாலையில் சென்று கொண்டிருந்தவர்களை விரட்டி விரட்டிக் கடிக்க தொடங்கியது. இதில் அதே பகுதியை சேர்ந்த 3 பேர் பலத்த காயமடைந்து, உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். வெறிநாயை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனர்.