News October 14, 2025
திருப்பூரில் சோகம் இளம் பெண் விபரீத முடிவு

திண்டுக்கல்லை சேர்ந்த தம்பதி ரமேஷ்-அங்காள ஈஸ்வரி (வயது 25). சில நாட்களுக்கு முன் இவர்களின் 4 மாத ஆண் குழந்தை உடல்நிலை சரியில்லாததால் இறந்து விட்டது. இந்நிலையில் வேலைக்காக தம்பதி, வேடசந்தூரில் இருந்து திருப்பூர் தளவாய்பட்டினத்துக்கு குடிபெயர்ந்தனர். அங்கு குழந்தை இறப்பால் மனஉளைச்சலில் இருந்த அங்காள ஈஸ்வரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தாராபுரம் ஆர்.டி.ஓ. விசாரண நடத்தி வருகிறார்.
Similar News
News October 14, 2025
திருப்பூரில் தெரிய வேண்டிய முக்கிய இணையதளங்கள்!

1)திருப்பூர் மாவட்ட இணையதளம்: https://tiruppur.nic.in/ta/ இதில் மாவட்டம் சார்ந்த அறிவிப்புகள், முக்கிய எண்கள் போன்றவைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
2)திருப்பூர் மாநகராட்சி:https://www.tnurbantree.tn.gov.in/tiruppur/about-us/ இதில் மாநகராட்சி சார்ந்த புகார்களுக்கு அணுகலாம்.
3)மாவட்ட நீதிமன்றம்https://tiruppur.dcourts.gov.in/இதில் நீதிமன்றம் சார்ந்த சேவைகளைப் பெறலாம்.
News October 14, 2025
திருப்பூர்: B.E படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பொறியியல் காலியிடங்களுக்கு 474 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. CIVIL, MECH., EEE, ECE உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த B.E/B.Tech படித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் அக்.16க்குள் <
News October 14, 2025
திருப்பூரில் வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது

வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரன் தலைமையிலான போலீசார் முத்தூர் சாலையில் நேற்று அக்.13 ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதிய பேருந்து நிலையம் அருகே லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரை பிடித்தனர். விசாரணையில், அவர் முத்தூர், பெருமாள்புதூரைச் சேர்ந்த செந்தில் (58) என தெரியவந்தது. இதையடுத்து, செந்திலைக் கைது செய்து, அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.