News May 3, 2024
திருப்பூரில் கூடுதல் கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு வாக்குப்பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள எல்ஆர்ஜி மகளிர் கலை கல்லூரியில் வைக்கப்பட்ட கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 256 கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜ் முன்னிலையில் கூடுதலாக 8 கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Similar News
News February 12, 2026
திருப்பூர் அருகே சோகம்: பள்ளி மாணவன் விபரீத முடிவு!

திருப்பூர் மாவட்டம் சேவூரை அடுத்த பந்தம்பாளையம் கணபதி நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி, இருவரும் அரசு பள்ளி ஆசிரியர்கள். இவர்களது மகன் கபிலன் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். அரையாண்டு தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததன் காரணமாக நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.சேவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News February 12, 2026
திருப்பூரில் வங்கதேசத்தவர் அதிரடி கைது

திருப்பூரை அடுத்த கணியாம்பூண்டி பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வங்கதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் தங்கி வேலை பார்ப்பதாக திருமுருகன்பூண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட பனியன் நிறுவனத்துக்கு சென்று உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த ரபிகுல் இஸ்லாம் என்பவரை கைது செய்தனர்.
News February 12, 2026
திருப்பூரில் பொது வேலை நிறுத்தம்

மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையில் நாடு தழுவிய அளவில் தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் சார்பில் இன்றைய தினம் பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூரில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தொழிற்சங்கத்தினர் பல்வேறு பகுதிகளில் கோரிக்கைகளுடன் கூடிய விளம்பர பதாகைகளை வைத்துள்ளனர்.


