News February 16, 2025
திருப்பூரில் குஷ்பு பேட்டி

திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் தொழில் கூட்டமைப்புடன் பட்ஜெட் விளக்க கலந்துரையாடல் கூட்டம் காங்கயம் சாலையில் உள்ள தனியார் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகை குஷ்பு பெண்கள் பாதுகாப்பிற்காக அனைத்து கட்சியைச் சேர்ந்த பெண்களை ஒருங்கிணைத்து மாநில அரசு சார்பில் கூட்டுக் கமிட்டி அமைக்க வேண்டும் என தெரிவித்தார். உடன் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன், நிர்வாகிகள் இருந்தனர்.
Similar News
News November 7, 2025
திருப்பூர்: 10 PASS போதும்..! ரூ.50,000 வரை சம்பளம்

ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1,483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளம்: ரூ.15,000 முதல் ரூ.50,000 வரை. கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு போதும். தேர்வு: நேர்காணல் மூலம். கடைசிநாள்: நவ.9-ம் தேதி ஆகும். https://www.tnrd.tn.gov.in/இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். (சொந்த ஊரில் வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க)
News November 7, 2025
திருப்பூரில் ரயிலில் அடிபட்டு பெண் பலி

திருப்பூர், ஊத்துக்குளி அருகே புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மைலால் (55). அவர் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் மைலால் வேலைக்கு செல்வதற்காக புதூர் பகுதியில் தண்டவாளத்தை கடக்கும்போது எதிர்பாராத விதமாக ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சென்ற திருப்பூர் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 7, 2025
திருப்பூர்: பெண் குழந்தை உள்ளதா? விண்ணப்பியுங்கள்!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திருப்பூர் மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். (SHARE)


