News January 3, 2026

திருப்பூரில் குறைந்த விலையில் பைக்!

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு உரிமை கோரப்படாத இருசக்கர வாகனங்கள் பொது ஏலம் விடுபடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 433 இருசக்கர வாகனங்கள் வருகின்ற 12ஆம் தேதி நல்லூரில் உள்ள மாவட்ட காவல் ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏல விடப்படும் எனவும். இதனை 10 மற்றும் 11ஆம் தேதிகளில் நேரில் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHAREIT

Similar News

News January 27, 2026

வீரபாண்டி அருகே வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது

image

திருப்பூர் வீரபாண்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட நொச்சி பாளையம் ரோடு அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆசை தம்பி(23) என்பதும் அவர் அந்த பகுதியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விற்பனைக்காக வைத்திருந்த 34 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

News January 27, 2026

உடுமலை அருகே கத்திக்குத்து சம்பவம்!

image

உடுமலை அருகே பெரிய வாளவாடியை சேர்த்தவர் வெள்ளியங்கிரி. இவரின் மனைவி உடன்  விஜய் என்பவர் பேசுவதை வெள்ளிங்கிரி கண்டித்தால் மனைவி தாய் வீட்டுக்கு சென்றார். ஆத்திரமடைந்த வெள்ளிங்கிரி விஜயுடன் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது விஜய் வைத்திருந்த கத்தியால் குத்தியதாக தெரிகிறது இதில் படுகாயம் அடைந்த வெள்ளிங்கிரி  உடுமலை GH-ல் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தளி காவல்துறை விசாரணை மேற்கொண்டனர்.

News January 27, 2026

திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (ஜன.26) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

error: Content is protected !!