News March 20, 2025
திருப்பூரில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

திருப்பூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் வரி, ஆகியவற்றை செலுத்தக்கூறி, மாநகராட்சி சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. மேலும் வார இறுதி நாட்களிலும் வரி வசூல் செய்யப்பட்டது. இந்நிலையில் முறையாக வரி செலுத்தாத, 568 வீடுகளில் குடிநீர் இணைப்பு, துண்டிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே வரி செலுத்தாதவர்கள் உடனடியாக வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Similar News
News March 20, 2025
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 58 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் நாளை முதல் ஏப்.,21ஆம் தேதி வரை <
News March 20, 2025
திருப்பூர் சுகாதாரத்துறையில் வேலை!

திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறையின் கீழ், நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள 42 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில் Staff Nurse, Hospital Worker உள்ளிட்ட பணிகள் காலியாக உள்ளன. இதில் வேலைக்கு ஏற்றார்போல், 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு வரும் 24ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு இங்கு <
News March 20, 2025
திருப்பூர்: வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

திருப்பூர், முத்தனம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவர் ராக்கியாபாளையம் பகுதியில் பால்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் பாலசுப்பிரமணியம் மற்றும் அவருடைய மனைவியும், பால்கடைக்கு வியாபாரம் பார்க்க வந்துள்ளார். அப்போது வீட்டில் பின்பக்கம் வழியாக உள்ளே சென்ற மர்மநபர், ரூ.85 ஆயிரம் பணத்தை திருடி சென்றார். இது குறித்து நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.