News April 7, 2025
திருப்பூரில் ஆதார் கார்டை ஒப்படைக்க வந்த மக்கள்

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வீரபாண்டி பகுதி குறவர் காலணியில் 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக பெய்த கனமழையின் காரணமாக அப்பகுதியில் தண்ணீர் தேங்கி உள்ள சூழ்நிலையில் அதனை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்காததால் தங்கள் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News April 7, 2025
தீரா நோய் தீர்க்கும் வாழை தோட்டத்து அய்யன் !

திருப்பூர் மாவட்டத்திலுள்ள சோமனூரின் வாழை தோட்டத்து அய்யன் கோயிலின் கருவறைக்குள் எல்லோரும் செல்லலாம். இந்தக் கோயில் உள்ள புற்று மண்ணை எடுத்து வீடு, வயல் வெளியில் தெளித்தால் அங்கு பாம்புகள் வராது என்பது நம்பிக்கை. தீரா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தோஷங்கள் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் தீர்வு கிடைக்குமாம். பிரச்சனை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News April 7, 2025
கலெக்டர் அலுவலகத்தில் 673 மனுக்கள் குவிந்தது

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும்நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 673 மனுக்களை அளித்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் இதனை பரிந்துரை செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
News April 7, 2025
திருப்பூர் மாவட்ட அங்கன்வாடியில் வேலை

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்.23ஆகும். ஊதியம் ரூ.7700 – 24,200 வரை வழங்கப்படும். (SHARE பண்ணுங்க.)