News January 18, 2026

திருப்பூரில் அதிரடி கைது!

image

திருப்பூர் தாராபுரம் சாலை கே செட்டிபாளையம் பகுதியில், சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நல்லூர் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போது, மது விற்பனையில் ஈடுபட்ட கந்தசாமி என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த, 26 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Similar News

News January 28, 2026

அலங்கியம் அருகே விபத்து: ஒருவர் பலி!

image

தாராபுரம் அருகே நேற்று இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பரமசிவம் (45) என்பவர் தாராபுரம் GH-ல் முதலுதவிக்குப் பின், மேல் சிகிச்சைக்காகத் திருப்பூர் GH-க்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 28, 2026

திருப்பூர் மக்களே செல்போனில் இது கட்டாயம்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377

2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639

3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832

4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098

5.முதியோருக்கான அவசர உதவி -1253

6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033

7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093

8.ரத்த வங்கி – 1910

9.கண் வங்கி -1919

10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989 ஷேர் பண்ணுங்க.

News January 28, 2026

திருப்பூர்: EC, பட்டா, சிட்டா.. இனி WhatsApp-ல்

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1) 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2) WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3) மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4) நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க

error: Content is protected !!