News February 11, 2025
திருப்பூரில் அடுத்த அதிர்ச்சி!

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி பள்ளியில் 7ஆம் வகுப்பு ஆசிரியர், மாணவர்களிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக, பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பள்ளியில் காவல்துறை, கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளியில், பெற்றோர்கள் நேரில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Similar News
News March 10, 2026
திருப்பூர்: மாதம்தோறும் ரூ.4,000 நிதியுதவி வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ₹4,000 வீதம் 3 ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.இந்தத் திட்டத்தைப் பெற, வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது.நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.
News March 10, 2026
உடுமலை அருகே கொத்தாக அதிமுகவில் ஐக்கியம்

உடுமலை குறுஞ்சேரி ஊராட்சியில் மாற்று கட்சிகளில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். ஒன்றிய செயலாளர் முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற இந்நிகழ்வில், புதிய உறுப்பினர்கள் உற்சாகமாக வரவேற்கப்பட்டனர். தேர்தல் நெருங்கும் வேளையில், கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் இந்த இணைப்பு நிகழ்வு நடைபெற்றது.
News March 10, 2026
திருப்பூர்: ரூ.50,000 சம்பளத்தில் வங்கி வேலை!

திருப்பூர் மக்களே, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள275 Specialist Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் வேலைக்கேற்ப ₹48,480 முதல் ₹1,20,940/- வரை வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை <


