News November 6, 2025

திருப்புவனத்தில் மின்னல் தாக்கி பெண்கள் படுகாயம்.!

image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழராங்கியம் காலனியை சேர்ந்தவர் அமிர்தவள்ளி (60). இவரது மருமகள் அன்பரசி (31). இருவரும் தங்களது வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது மழை பெய்தது. திடீரென மின்னல் பாய்ந்ததில் அமிர்தவள்ளி, அன்பரசி ஆகிய இரு வரும் பலத்தகாயமடைந்தனர். இருவரும் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News November 6, 2025

சிவகங்கையை சுற்றிப்பார்க்க இந்த ஒரு நம்பர் போதும்.!

image

சிவகங்கை மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. சுற்றுலா தலங்களை சுற்றிப் பார்க்க கண்டிப்பாக ஒரு Tourist Guide தேவைப்படும். அப்படி சிவகங்கை மாவட்டத்திற்கு அரசு சுற்றுலா அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்துல நீங்க எங்க போகனும்னாலும் 04565-232348 இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க.. Tourist Guide- ஓட Enjoy பண்ணுங்க.!

News November 6, 2025

சிவகங்கை: 4 பவுன் நகை பறிப்பு; பைக் திருடர்கள் கைவரிசை

image

தேவகோட்டை அருகே புளியாலைச் சேர்ந்த அருள் மனைவி தனலெட்சுமி (42). அப்பகுதியில் உள்ள பிள்ளையார் கோயில் ஊருணி கரையில் நடந்து சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், தனலெட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து தனலெட்சுமி அளித்த புகாரின் பேரில், தேவகோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News November 6, 2025

சிவகங்கை: போட்டித் தேர்வர்களுக்கு குட் நியூஸ்..!

image

தமிழக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக, மென் பாடக் குறிப்புகள் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இனி TNPSC, TNUSRB, RRB மற்றும் TRB போன்ற அனைத்து தேர்வுகளுக்குமான பாடத்திட்டம் தொடர்பான சந்தேகங்களை இந்த லிங்கை <>கிளிக் செய்து<<>> எளிதாக தெரிந்து கொள்ளலாம். இந்த லிங்கை தேர்வுக்கு தயாராகும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணி HELP பண்ணுங்க.

error: Content is protected !!