News December 11, 2025
திருப்பரங்குன்றம் விவகாரம்.. கொந்தளித்த அமித்ஷா

ஒரு தீர்ப்பை வழங்கியதற்காக நீதிபதி மீது எதிர்க்கட்சிகள் பதவிநீக்க தீர்மானம் கொண்டு வந்தது, அர்த்தமற்றது என அமித்ஷா கூறியுள்ளார். Parliment-ல் திருப்பரங்குன்றம் விவகாரத்தை மறைமுகமாக குறிப்பிட்ட அமித்ஷா, யாரையோ திருப்திப்படுத்த தீர்மானம் கொண்டுவரப்பட்டதாக பேசியுள்ளார். மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிக்கு எதிராக உத்தவ் தாக்கரே கட்சி கூட கையெழுத்திட்டுள்ளதாக அமித்ஷா சாடினார்.
Similar News
News December 11, 2025
விஜய் உடன் கூட்டணியா? முடிவை அறிவித்தார்

பாஜகவுடன் கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸை விஜய் விமர்சித்து பேசாத நிலையில், தவெகவுடன் கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், 2026 தேர்தலில் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதா என்று புதுச்சேரி <<18524978>>CM<<>> ரங்கசாமியிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ‘நன்றி வணக்கம்’ என கூறிச் சென்றார். இது தவெக உடனான கூட்டணிக்கான சமிக்ஞையே என கூறப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?
News December 11, 2025
தலைகீழாய் காட்சி தரும் சிவபெருமான்!

ஆந்திரா, பீமாவரத்தில் யனமதுரு ஸ்ரீ பார்வதி அம்பிகா சமேத சக்தீஸ்வரர் ஆலயத்தில் சிவன் தலைகீழாய் காட்சி தருகிறார். சம்பாசுரன் என்ற அரக்கன் யமபுரியை கைப்பற்ற, யமன் சிவனை நோக்கி தவம் புரிந்தார். அப்போது சிவன், தற்போது கோயிலுள்ள இடத்தில் சிரசாசனத்தில் தியான நிலையில் இருந்தார். எனவே, பார்வதியின் அருளுடன் அசுரனை கொன்ற யமன், பின் இங்கு வந்து இறைவனை வழிபட்டாராம். இக்கோயில் யமபயத்தை போக்கும் எனப்படுகிறது.
News December 11, 2025
விஜய் இன்று முக்கிய ஆலோசனை

பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் விஜய் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். மாநில, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் இதில் கலந்து கொள்ள உள்ளனர். பூத் கமிட்டி, நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட பணிகள் முழுமை அடையாததால், பல மா.செ.,க்கள் மீது விஜய் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால், தேர்தலுக்கு முன்னதாக மா.செ.,க்களை ஒழுங்குப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.


