News February 10, 2025
திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று என அறிவிக்க கோரி மனு

திருப்பரங்குன்றம் மலையை ” சமணர் குன்று ” என அறிவிக்க கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று பொதுநல அமைப்பு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. திருப்பரங்குன்றம் மலை சம்பந்தமாக நிலுவையில் உள்ள வழக்குகளுடன் சேர்த்து பட்டியலிட மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Similar News
News March 3, 2026
மதுரை: முக்கிய ரயில்களின் சேவையில் அதிரடி மாற்றம்

மதுரை கோட்டத்தில் நடைபெறும் பராமரிப்புப் பணிகள் காரணமாக சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி – ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், ஐதராபாத் செல்லும் சிறப்பு ரயில் ஆகியவை வருகிற 7, 14, 21, 28 மற்றும் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
News March 3, 2026
மதுரை: மாதம் ரூ.3,000 ..! இந்த கார்டு உள்ளதா?

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே <
News March 3, 2026
மதுரை மாவட்டத்தில் 33,958 போ் பிளஸ் 2 தோ்வு எழுதினா்

மதுரை மாவட்டத்தில் 323 பள்ளிகளைச் சோ்ந்த 16,160 மாணவா்கள், 18,036 மாணவிகள் என மொத்தம் 34,504 போ் விண்ணப்பித்தனா். இந்நிலையில், மதுரை மாவட்டம் முழுவதும் 110 தோ்வு மையங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற தோ்வை 33,957 மாணவ, மாணவிகள் எழுதினா். எஞ்சியுள்ள 546 போ் தோ்வை எழுதவில்லை. இதேபோல, 836 தனித்தோ்வா்களும் தோ்வு எழுத விண்ணப்பித்தனா். இவா்களில், 761 போ் எழுதினா்; எஞ்சிய 75 போ் தோ்வை எழுதவில்லை.


