News December 6, 2025

திருப்பரங்குன்றம் சர்ச்சை.. CM ஸ்டாலினுக்கு தமிழிசை பதிலடி

image

மக்களின் வளர்ச்சியின் மீது கவனம் செலுத்துவதை தவிர்த்து, இந்துக்களின் உணர்ச்சிகளை புண்படுத்துவதில் CM ஸ்டாலின் கவனம் செலுத்துவதாக தமிழிசை சாடியுள்ளார்.<<18474670>> திருப்பரங்குன்றம் விஷயத்தில்<<>> பாஜகவை CM சூசகமாக சாடிய நிலையில், அதை தமிழிசை விமர்சித்துள்ளார். மாநகராட்சி ஊழலில் மேயர் ராஜினாமா, மாசடைந்த வைகை நீர் பற்றிய HC-ன் கருத்தை சுட்டிக்காட்டி, இதுதான் உங்கள் வளர்ச்சியா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News

News March 29, 2026

வேட்புமனு தாக்கலின்போது 5 பேருக்கு மட்டுமே அனுமதி

image

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை முதல் தொடங்குகிறது. மார்ச் 30 – ஏப்.6-ம் தேதி வரையிலான 8 நாள்களில் <<19475048>>4 நாள்கள்<<>> மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியும். பொதுத் தொகுதிக்கு ₹10,000, தனித் தொகுதிக்கு ₹5,000 டெபாசிட் செலுத்த வேண்டும். வேட்புமனு தாக்கலின்போது தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்குள் வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. <<-se>>#TNElection2026<<>>

News March 29, 2026

கேரள மக்கள் NDA-வுக்கு ஆதரவாக உள்ளனர்: மோடி

image

ஏப்.9-ல் கேரள பேரவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, இன்று பிற்பகல் பாலக்காட்டில் நடைபெறும் NDA பிரசார கூட்டத்தில் PM மோடி பங்கேற்கிறார். இந்நிலையில், கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி (LDF) & ஐக்கிய ஜனநாயக முன்னணியின் (UDF) மோசமான ஆட்சியால் மக்கள் சலித்து போய்விட்டனர் என மோடி விமர்சித்துள்ளார். அதேநேரம், அம்மாநில மக்களின் மனநிலை NDA கூட்டணிக்கு ஆதரவாக உள்ளதாகவும் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

News March 29, 2026

அப்போ ஸ்டாலின்.. இப்போ உதயநிதிக்கு எதிராக போட்டி

image

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணியில் DCM உதயநிதியை எதிர்த்து அதிமுகவின் ஆதிராஜாராம் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். 2021-ல் CM ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அவர் 70,384 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். முன்னதாக, 2006-ல் ஆயிரம் விளக்கு தொகுதியில் CM ஸ்டாலினை விட 2,468 வாக்குகள் வித்தியாசத்திலேயே ஆதிராஜாராம் தோல்வியடைந்திருந்தார். இம்முறை எப்படி இருக்கும்?

error: Content is protected !!