News December 18, 2025
திருப்பரங்குன்றத்தில் அடுத்த சர்ச்சை: புதிய புகார் மனு

திருப்பரங்குன்றத்தில் இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலை கண்ணன் தலைமையில் நிர்வாகிகள் காவல் நிலையத்தில், சந்தனக்கூடு மற்றும் கல்லத்தி மரம் தொடர்பாக புகார் மனு ஒன்றை இன்று அளித்தனர். அதில் இன்னும் 2 நாளில் மலை மீது உள்ள தர்கா சார்பாக சந்தனக்கூடு நடைபெற உள்ளது. தீபத்தூண் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் மலை மீது செல்லவோ எந்த நிகழ்வும் நடத்தவோ அனுமதிக்க கூடாது என புகார் அளிக்கப்பட்டது.
Similar News
News December 20, 2025
மதுரையின் முக்கிய பகுதிகளில் இன்று மின்தடை

மதுரை மாவட்டத்தில் நாளை(டிச.20) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக தல்லாகுளம், தமுக்கம், செல்லூர், குலமங்கலம் மெயின் ரோடு, நரிமேடு, அண்ணா பேருந்து நிலையம், கலெக்டர் ஆபீஸ், சர்வேயர் காலணி, அழகர்கோவில், மேலூர், வாடிப்பட்டி, ஆழ்வார்புரம், முனிச்சாலை, திருமங்கலம், ஒத்தக்கடை, மேலமடை, புதூர் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படவுள்ளது. SHARE
News December 19, 2025
BREAKING:மதுரையில் 3,80,474 வாக்காளர்கள் நீக்கம்

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் இன்று மதுரை கலெக்டரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான பிரவீன் குமார் வெளியிட்டார். இதில் ஆண்கள் 11,58,601 பெண்கள் 12, 01,319, மூன்றாம் பாலினத்தவர் 237 என மொத்தம் 23,60,157 வாக்காளர்கள் உள்ளனர். முகவரி இல்லாதவர்கள், குடியிருப்பு மாறியவர்கள், இறந்தவர்கள், இரட்டை பதிவு என மொத்தம் 3,80,474 வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
News December 19, 2025
மதுரை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில்<
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.


