News December 22, 2025

திருப்பத்தூர்: 8 வயது சிறுமி விபத்தில் பலி!

image

ஜோலார்பேட்டை, எஸ்.கோடியூர் பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரது மகள் ஜோஷிகா (8) அப்பகுதியிலுள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 16ம் தேதி பள்ளி முடிந்து சிறுமி சந்தைக்கோடியூரில் சாலையை கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்தார். தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Similar News

News December 27, 2025

மாற்றத்தில் திருப்பத்தூர்!

image

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் முதல் ஓசூர் வரை, கந்திலி, பருகூர், கிருஷ்ணகிரி, சூளகிரி புதிய ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டு வருவதால் Tirupattur railway junction ஆக தரம் உயரத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு தென்னக ரயில்வேயில் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இது திருப்பத்தூர் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தி தான். ஷேர் பண்னுங்க.

News December 26, 2025

இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள்

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை தினந்தோறும் இரவு ரோந்து பணி அதிகாரிகள் நியமிக்கிறது. இன்று (26.12.2025) இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பாதுகாப்பில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொடர்பு எண் ஆகியவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

News December 26, 2025

திருப்பத்தூர் பெயர் காரணம் தெரியுமா?- சுவாரசியம்!

image

சந்தன மாநகர் என்றும் அழைக்கப்படும் திருப்பத்தூர் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. ஆதியூர் முதல் கோடியூர் வரை 8 திசைகளில் 10 திருத்தலங்கள் இருந்ததால் திரு+பத்து+ஊர் = “திருப்பத்தூர்” என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. 14ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்கள் திருவனபுரம் என்ற பெயரை “திருப்பத்தூர்” என்று மாற்றியதாக கூறப்படுகிறது. மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!