News December 30, 2025
திருப்பத்தூர்: 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000

மத்திய அரசின் மிஷன் வத்சல்யா குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. வருமான சான்றிதழ் இருந்தாலே போதும், இ-சேவை மையத்தில் நேரடியாக அல்லது ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை (9092393896, 04426426421) தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News December 31, 2025
ஆம்பூரில் 2 பேர் அதிரடி கைது

ஆம்பூர் கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்த முனுசாமி என்பவரது வீட்டில், நேற்று முன்தினம் இரவு புகுந்த மர்ம நபர்கள் மின் மோட்டாரைத் திருடிச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் ஆம்பூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மோட்டார் திருட்டில் ஈடுபட்ட ஆம்பூர் பி கஸ்பா பகுதியைச் சேர்ந்த யோகன் (26) மற்றும் விக்னேஷ் (27) ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News December 31, 2025
திருப்பத்தூர்: வீட்டின் அருகில் குடியிருந்த மலைப்பாம்பு!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மேல்மாமுடிமாணப்பள்ளி விநாயகர் கோவில் வட்டத்தை சேர்ந்த செஞ்சி என்பவரின் வீட்டின் அருகில் நேற்று (30) சுமார் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று இருந்தது. உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை பிடித்து காப்பு காட்டில் விட்டனர்.
News December 30, 2025
திருப்பத்தூர்: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில்,<


