News September 20, 2025
திருப்பத்தூர்: 10th பாஸ் போதும்…காவல்துறையில் வேலை!

தமிழ்நாடு காவல்துறையில் கான்ஸ்டபிள், சிறைக் காவலர், போன்ற பணிகளுக்கு 3,665 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதுக்கு மேல் இருந்து 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இந்த பணிக்கு மாதம் ரூ.18,200-ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் நாளையே விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கில் விண்ணப்பிக்கலாம். காவல்துறையில் வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News September 20, 2025
சிறப்பு கல்வி மையத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் சிறப்பு கல்வி மையத்தில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்க்கொண்டார். அப்போது சிறப்பு கல்வி மையத்தில் பயிலும் மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி அவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்தார்.
News September 20, 2025
திருப்பத்தூர்: போலி தங்க நகை அடகு வைத்து ரூ.1 லட்சம் அபேஸ்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வண்டி தெருவில் உள்ள அடகு கடை ஒன்றில் போலி தங்க செயின் வைத்து 1 லட்சம் ரூபாய் பணத்தை ஏமாற்றி சென்ற கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் பகுதியை சேர்ந்த மாதவன் (வயது 40) என்பவரை கடையின் ஊழியர் நந்தினி கொடுத்த புகாரின் பேரில் இன்று (செப்.20) வாணியம்பாடி நகர காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
News September 20, 2025
திருப்பத்தூர்: புரட்டாசி முதல் சனி! இதை மறக்காம பண்ணிருங்க!

புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று அசைவ உணவுகளைத் தவிர்த்து, விரதம் இருந்து பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடலாம். வீடுகளிலும் கோயில்களிலும் மாவிளக்கு ஏற்றி, பெருமாளின் நாமங்களை உச்சரித்து வழிபடுவதன் மூலம் குடும்பத்தில் செல்வம் செழித்து துன்பங்கள் நீங்கி, நல்லவை நடக்கும் என்பது நம்பிக்கை. திருப்பத்தூர் கோட்டை ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று வழிபடுவது சிறப்பாக கருதப்படுகிறது.