News December 20, 2025
திருப்பத்தூர்: 10, 11, 12-ம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு!

திருப்பத்தூரில் கடந்த கல்வியாண்டில் (2024-25) 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகளை எழுத தவறியவர்களுக்கான மறுத்தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த கல்வியாண்டில் தேர்வு எழுதுவதற்கான விண்ணப்ப படிவங்களை இணையதள மூலம் வரும் டிசம்பர் 22 முதல் ஜனவரி 7 வரை மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுகள் இயக்கக சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 22, 2025
திருப்பத்தூர்: கேஸ் புக் பண்ண புது வழி!

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARe பண்ணுங்க.
News December 22, 2025
திருப்பத்தூர்: அதிமுக மருத்துவரணி துணை செயலாளர் நியமனம்

பூங்குளம் கிராமத்தை சேர்ந்த மருத்துவர் பசுபதி M.D. இவர் தற்போது திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர் வீரமணியின் பரிந்துரையின் பேரில் அதிமுக திருப்பத்தூர் மாவட்ட கழக மருத்துவ அணி துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்காக தற்போது, மருத்துவ அணி துணைச் செயலாளலாளர் பசுபதி, வீரமணி மற்றும் கட்சி தலைவர் எடப்பாடி பழனி சாமி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
News December 22, 2025
திருப்பத்தூர்: வட மாநில இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்!

செல்லறப்பட்டியை சேர்ந்த நெப்போலியன், ஹலோ பிரிக்ஸ் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவரிடம் வேலை பார்த்த அரவிந்த் மான்ஜே வடமாநில வாலிபர், ஊருக்கு செல்வதாக கூறி அருகிலுள்ள மாட்டு பண்ணையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இதையறிந்த நெப்போலியன், அவரை கொடூரமாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


