News December 28, 2025

திருப்பத்தூர்: ஹோட்டலில் தரமற்ற உணவா?

image

தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பு துறை பல இடங்களில் தீவிர சோதனையில் ஒரு பக்கம் ஈடுபட்டு வருகிறது. ஆனால் மறுபக்கம் தரமற்ற உணவு, கலப்படப் பொருட்களை கொண்டு சமைத்தல் போன்ற புகார் தொடர்ந்து எழுகிறது. சமீப காலமாக சில முக்கிய உணவகத்தில் இதுபோன்ற குற்றசாட்டுகள் எழுந்தது. இது போன்ற பிரச்சனைகளுக்கு உடனடியாக 9444042322 என்ற Whatsapp எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இதுபோன்ற பயனுள்ள தகவல்களை ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 26, 2026

ரூ1.13 கோடி மதிப்பீட்டில் நல திட்ட உதவிகள்!

image

ஜோலார்பேட்டை ஒன்றியம் பாச்சல் ஆயுதப்படை காவலர் பயிற்சி வளாகத்தில் இன்று நடைபெற்ற 77 வது குடியரசு தின விழாவில் பல்வேறு அரசு துறைகளின் சார்பாக 97 பயனாளிகளுக்கு ரூ 1.13 கோடி மதிப்பீட்டில் அரசு நல திட்டங்களை மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்தரவல்லி வழங்கினார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி, மகளிர் திட்ட அலுவலர் விஜயகுமாரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மற்றும் பலர் பங்கேற்றனர்.

News January 26, 2026

சிறப்பாக பணியாற்றிய மல்லகுண்டா விஏஓ-க்கு சான்றிதழ்!

image

திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் கிரவுண்டில் இன்று நடைபெற்ற 77 வது குடியரசு தின விழாவில் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். அந்த வகையில் மல்லகுண்டா விஏஓ சந்திரமோகனுக்கு சிறந்த பணிக்கான நன்மதிப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

News January 26, 2026

31 மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்!

image

ஜோலார்பேட்டை ஒன்றியம் பாச்சல் ஆயுதப்படை காவலர் பயிற்சி வளாகத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. இதில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற கலை திருவிழாவில் வெற்றி பெற்ற 31 மாணவ மாணவிகளுக்கு, மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

error: Content is protected !!