News August 20, 2025

திருப்பத்தூர்: வாராந்திர மக்கள் குறைத்தீர்வு கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று 20.08.2025 வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 38 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்கள்.

Similar News

News August 20, 2025

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து போலீசார்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஆகஸ்ட் (20) இரவு 10 மணி முதல் காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உட்கோட்ட போலிஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணிகள் ஈடுபட்டும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.

News August 20, 2025

திருப்பத்தூர்: மாணவன் பைக் மோதி படுகாயம்

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா பெரியங்குப்பம் தேசிய நெடுஞ்சாலை இன்று ஆகஸ்ட் 20 மாலை வாணியம்பாடி ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலை சாலையைக் கடக்கும் போது பைக் மோதி சோலூர் ஊராட்சி பகுதியை சேர்ந்த ரஜினி மகன் ராகேஷ் வயது (14) 9 வகுப்பு பள்ளி மாணவன் படுகாயமடைந்தார். அவரை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகிறது.

News August 20, 2025

திருப்பத்தூரில் கூட்டுறவு வளர்ச்சிக் குழு கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாலை 6 மணியளவில் கூட்டுறவுத்துறை சார்பில் மாவட்ட கூட்டுறவு வளர்ச்சி குழு கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் க. சிவ சௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. உடன் கூட்டுறவு சங்க இணை பதிவாளர் மலர்விழி துணைப்பதிவாளர் மீனாட்சி உதவி பொது மேலாளர் நபார்டு ஸ்ரீபதிராஜன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.

error: Content is protected !!