News August 18, 2024
திருப்பத்தூர் வரவுள்ள அதிமுக பொதுச் செயலாளர்

திருப்பத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் கடந்த வியாழக்கிழமை உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார். இந்த நிலையில், அவருடைய படத்திறப்பு நிகழ்விற்கு தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி வருகின்ற 21.08.2024 புதன்கிழமை காலை 9.00 மணியளவில் காக்கங்கரையில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு வருகை தர உள்ளதாக திருப்பத்தூர் அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
Similar News
News December 30, 2025
திருப்பத்தூரில் பயங்கர தீ விபத்து!

திருப்பத்தூர் நகராட்சி ஆசிரியர் நகர் பகுதியை அடுத்த அண்ணான்டப்பட்டியில் மனோன்மணி என்பவர் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று (டிச.29) திடீரென மின்கசிவு காரணமாக குடிசை தீ பற்றி எரிந்தது. புகையைக் கண்டு வந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News December 30, 2025
திருப்பத்தூர்: மகளுக்கு விஷம் கொடுத்த கொடூர தந்தை!

காந்திநகரை சேர்ந்த நகை தொழிலாளி மணிகண்டன் (50) மகள் கெஜலட்சுமி (23). இவர் கோவை தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவர் ஆதியூரை சேர்ந்த வாலிபரை காதலித்து வந்தார். மகளின் காதல் பிடிக்காததால், மணிகண்டன், விடுமுறைக்காக வீட்டுக்கு வந்த மகளுக்கு நேற்று முன்தினம் மாதுளம் பழத்தில் விஷம் கலந்து கொடுத்து தானும் அதே பழத்தை சாப்பிட்டுள்ளார். இந்நிலையில் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
News December 30, 2025
திருப்பத்தூர்: தம்பி மனைவியிடம் ஆபாசப் பேச்சு!

ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் வெங்கட் சமுத்திரம் ஊராட்சி கோவிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த தேவன் என்பவரின் மனைவி மாலதி(40). கூலித் தொழிலாளியான இவரிடம் இவரது கணவனின் அண்ணன் குமார்(55) தினசரி ஆபாசமாக பேசுவது, சண்டை போடுவது என இருந்து வந்துள்ளார். இதுகுறித்து உமராபாத் போலீஸ் நிலையத்தில் மாலதி புகாரின் பேரில் குமாரை நேற்று கைது செய்தனர்.


