News October 23, 2024
திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை!

திருப்பத்தூர் மாவட்டம் கொரட்டி பகுதியில் அமைந்துள்ள திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பல்வேறு புகார்கள் வந்ததை எடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று மாலை 5 மணியளவில் அலுவலகத்தில் பல்வேறு பராமரிக்கப்படும் பதிவேடுகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இன்று புதிய ஓட்டுநர் உரிமம் வாகனம் பதிவு ஆகியவையும் சோதனை உட்படுத்தப்பட்டு வருகின்றன.
Similar News
News February 1, 2026
திருப்பத்தூர்: தண்ணீரால் வந்த வினை!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சின்ன வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்தவர் அனுமுத்து. இவர் நேற்று (31.01.2026) அதேபகுதியில் உள்ள தனது, விவசாய நிலத்தில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராவிதமாக, மின்சாரம் பாய்ந்து அனுமுத்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், இதுகுறித்து வாணியம்பாடி காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
News February 1, 2026
திருப்பத்தூர் தாய்மார்களுக்கு ரூ.11,000

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) மூலம் கர்ப்பிணிகள் & பாலூட்டும் தாய்மார்களுக்கு மொத்தம் ரூ.11,000 உதவி வழங்கப்படுகிறது. முதல் குழந்தைக்கு ரூ.5,000 மற்றும் 2-வது பெண் குழந்தை என்றால் ரூ.6,000 இந்த திட்டம் மூலம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க அருகிலுள்ள அரசு சுகாதார மையத்தை அணுகலாம். அல்லது <
News February 1, 2026
திருப்பத்தூர்: மதுபோதையில் நண்பரை கொன்ற கொடூரம்!

திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் டாஸ்மாக் கடை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், சாமிநாதபுரத்தைச் சேர்ந்த அப்புனு(40) என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் கோகுலை, ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களிடையே ஏற்பட்ட இந்த மோதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


