News March 24, 2025
திருப்பத்தூர்: வங்கியில் ரூ.1.30 கோடி மோசடி

திருப்பத்துார் மாவட்டம், கருப்பனுாரைச் சேர்ந்தவர் பாஸ்கரன், 42. இவர் காந்திபேட்டை இந்தியன் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்தார். 2011- 2025 மார்ச் 10 வரையிலான காலகட்டத்தில், 42 வாடிக்கையாளர்களை இவரே ஏற்பாடு செய்து, 200 சவரன் போலி நகைகளை வங்கியில் அடமானம் வைத்து, 1.30 கோடி ரூபாய் மோசடி செய்தது ஆய்வில் தெரிய வந்தது. புகாரின்பேரில் திருப்பத்துார் டவுன் போலீசார், பாஸ்கரனை கைது செய்தனர்.
Similar News
News November 4, 2025
இளநிலை உதவியாளர் பணிக்கான ஆணை

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (நவ.04) ஜோலார்பேட்டை ஒன்றியம் பாய்ச்சல் ஊராட்சி லட்சுமி நகர் பகுதியில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சுகேஷ் என்பவர் இறந்தார். இந்த நிலையில் அவரின் குடும்ப நலன் கருதி ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் அவரது சகோதரி சுவாதிக்கு பள்ளி கல்வித்துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணிக்கான ஆணை ஆட்சியர் க.சிவசௌந்திரவல்லி நவ.04 இன்று வழங்கினார்.
News November 4, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (நவ 4) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
News November 4, 2025
திருப்பத்தூர்: இன்ஸ்டாகிராம் பயனாளிகள் கவனத்திற்கு!

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மக்களுக்கு இன்று (நவ.04) வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் மக்கள் தங்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகளை பிரிவேட்டாக (private) வைக்க அறிவுறுத்தி உள்ளது. பப்ளிக் (public)இன்ஸ்டாகிராம் கணக்குகளில் உள்ள புகைப்படங்களை தவறாக சித்தரித்து மிரட்டி பணம் பறிக்கும் குற்றங்கள் அரங்கேற்றுவதாக எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.


