News December 15, 2025
திருப்பத்தூர் ரிப்போர்ட்டர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

திருப்பத்தூர் மாவட்டத்தில் பணியாற்றும் தினசரி நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி நிருபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் க.சிவ சௌந்தரவல்லி புது உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி, ஆட்சியர் அலுவகத்தில் நடைபெறும் அரசு விழாக்கள், குறைதீர்வு மற்றும் ஆய்வுக்கூட்டங்கள் போன்றவற்றில் கலந்துக்கொள்ளும் போது நிருபர்கள் தங்களது அடையாள அட்டையை அணிந்து வர வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 16, 2025
திருப்பத்தூர்: கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் கிடந்த சடலம்

ஆலங்காயம், துரிஞ்சிகுப்பம் பகுதியில் நேற்று (டிச.15) கழுத்தில் வெட்டு காயங்களுடன் மர்மமான முறையில் ஒருவர் உயிரிழந்து கிடந்தார். இதனை கண்ட அப்பகுதி மக்கள், ஆலங்காயம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டனர். மேலும், இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
News December 15, 2025
திருப்பத்தூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

திருப்பத்தூர், இன்று டிச.15 இரவு முதல் காலை 6 மணி வரை திருப்பத்தூர் மாவட்டத்தில் ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் ஆம்பூர் சப் டிவிஷன், வாணியம்பாடி சப் டிவிஷன், திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அவர்களில் தொலைபேசி எண் மேலே குறிப்பிட்டுள்ளது. இரவில் தனியாக வேலைக்கு செல்லூம் பெண்கள், ஆண்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.
News December 15, 2025
திருப்பத்தூரில் 8th, 10th, +2, டிகிரி முடித்தவரா நீங்கள்?

திருப்பத்தூர் மக்களே, தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், டிச.20 ஆம் தேதி காலை 9 மணி முதல் 3 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமியா கல்லூரியில் நடைபெறும் இந்த முகாமில் 8th, 10th, +2, டிகிரி முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். இதில் 5000-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. மேலும், விவரங்களுக்கு இங்கு <


