News August 14, 2025
திருப்பத்தூர்: ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் 79 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து ரயில் நிலையத்தில் பல்வேறு இடங்களில் தீவிர பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ரயில் நிலையத்தில் உள்ள நுழைவு வாயில் மற்றும் ரயில் நிலையத்திற்குள் வரும் பயணிகளின் உடைமைகள், பயணிகளின் ரயில்களில் தீவிர சோதனை செய்தனர்.
Similar News
News August 14, 2025
திருப்பத்தூரில் பலத்த பாதுகாப்பு!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட்15) சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து மாவட்ட கலெக்டர் ஆயுதப்படை மைதானத்தில் தேசிய கொடியேற்றுகிறார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் அதிகம் கூடிய இடங்களில் மாவட்ட எஸ்பி தலைமையில் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 511 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் செளமியா தெரிவித்தார்.
News August 14, 2025
திருப்பத்தூர்: ரூ.72,000 சம்பளத்தில் வேலை!

திருப்பத்தூர் மக்களே, தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு Any டிகிரி போதும், சம்பளம் ரூ.72,000 வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.08.2025 தேதிக்குள் <
News August 14, 2025
காவல்துறை எச்சரிக்கை: நம்பி ஏமாற வேண்டாம்

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தனது சமூக வலைத்தளம் பக்கத்தில், வெளிநாட்டில் வேலை வாய்ப்பு மற்றும் பகுதிநேர வேலை வாய்ப்பு என உங்கள் அலைபேசிக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை, நம்பி ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துயுள்ளனர்.