News August 10, 2025

திருப்பத்தூர்: ரயில்வேயில் சூப்பர் வேலை; கைநிறைய சம்பளம்

image

ரயில்வேயில் மருத்துவப் பிரிவில் செவிலியர் கண்காணிப்பாளர், பார்மசிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 434 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 12th, நர்சிங், B.Pharma என பணிகளுக்கு ஏற்றவாறு கல்வி தகுதி மாறுபடும். மாதம் ரூ.25,500-ரூ.44,900 வரை சம்பளம் வழங்கப்படும். 18- 40 வயது உள்ளவர்கள் <>இந்த லிங்கில் <<>>வரும் செ.8ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News August 10, 2025

திருப்பத்தூர்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 10, 2025

திருப்பத்தூரில் இன்று பாரம்பரிய கண்காட்சி

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பிரியா மஹாலில் இன்று (ஆக.10) ஆம்பூர் மரபுசார் பாரம்பரிய அரிசி மற்றும் விதைகள் கண்காட்சி நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை அனுமதி இலவசம். கண்காட்சியில் பாரம்பரிய கலை நிகழ்ச்சி, இயற்கை வேளாண்மை விற்பனையகங்கள், மூத்த முன்னோடி ஆளுமைகளின் சிறப்புரை, பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன விருப்பம் உள்ளவர்கள் பங்கேற்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 10, 2025

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் 1448 பேர் பயனடைந்தாக அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (09) நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாமில் 230 அமைப்பு சாரா தொழிலாளர்கள், 95 தூய்மை பணியாளர்கள், உள்ளிட்ட 1448 நபர்கள் பயனடைந்துள்ளனர். இதில் 149 மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 23 நபர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

error: Content is protected !!