News September 27, 2025
திருப்பத்தூர்: மோசடி புகாரில் இன்ஸ்பெக்டரின் மனைவி, மகன் கைது

ஆம்பூரைச் சேர்ந்த கலால் இன்ஸ்பெக்டரின் மனைவி மாலதி மகன் நித்திஷ்குமார் ஆகியோர், ஆன்லைன் வர்த்தகத்தில் இரட்டிப்புப் பணம் தருவதாகக் கூறி நண்பர்கள், உறவினர்களிடம் ரூ.69 லட்சம் வரை மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். நித்திஷ்குமார் நண்பர்கள், உறவினர்களை முதலீடு செய்ய வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். மோசடிக்கு உடந்தையாக இருந்த தாய் மாலதியும் கைது. தலைமறைவான அஞ்சனாவை போலீஸார் தேடுகின்றனர்.
Similar News
News January 6, 2026
திருப்பத்தூரில் டிராக்டர் வாங்க 80% மானியம்!

திருப்பத்தூரில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு இங்கு <
News January 6, 2026
BREAKING: திருப்பத்தூரில் மழை வெளுக்கும்!

தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் திருப்பத்தூர் பகுதிகளில் வரும் ஜன.10 மற்றும் ஜன.11 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இதனால் அண்டை மாவட்டங்களான வேலூர், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் மலை பெய்ய வாய்ப்புள்ளது. ஷேர் பண்ணுங்க
News January 6, 2026
திருப்பத்தூர்: B.E, B.tech, MBA, M.sc முடித்தவர்களா நீங்கள்?

திருப்பத்தூர் மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் (TNPSC) 76 உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு B.E/B.tech, B.L./L.L.B, MBA, M.sc, CA/ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள் <


