News January 13, 2026
திருப்பத்தூர்: மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம்

ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த ஜனவரி 11-ம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி வெங்கடேசன் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள் ஆகிய உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டுள்ளன.
Similar News
News January 28, 2026
ஆம்பூரில் அதிகாலையில் அதிர்ச்சி!

ஆம்பூர் அடுத்த உமராபாத் போலீஸ் எல்லையில் பாலூர் ஊராட்சி பகுதியில் இன்று (ஜனவரி 28) அதிகாலை ஸ்ரீ ஆனந்தீஸ்வரர் ஆலயத்தில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உண்டியல் பணம் மற்றும் அம்மன் கழுத்தில் இருந்த 2 தங்க சங்கிலியை திருடியுள்ளனர். சம்பவம் குறித்து உமராபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News January 28, 2026
அறிவித்தார் திருப்பத்தூர் கலெக்டர்!

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஜனவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வருகிற 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கலெக்டர் சிவசவுந்தரவல்லி தலைமையில் நடக்கிறது. கூட்டத்தில் அனைத்துத்துறை மாவட்ட அலுவலர்களும் விவசாயிகளின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஷேர் பண்ணுங்க.
News January 28, 2026
திருப்பத்தூர்: நடுவழியில் நின்ற ரயில்; அதிர்ந்து போன பயணிகள்

பீகார் மாநிலம் தானாபூரிலிருந்து பெங்களூரு வரை செல்லும் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. வாணியம்பாடி அடுத்த விண்ணமங்கலம் – வாணியம்பாடி ரயில் நிலையத்திற்கு இடையே சென்றபோது கிரீன் சிக்னல் இருந்த நிலையில் திடீரென ரெட் சிக்னலுக்கு மாறியது. சிக்னல் கோளாறால் 15 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. திடீரென ரயில் நின்றதால் பயணிகள் அச்சமடைந்தனர்.


