News March 28, 2024
திருப்பத்தூர்: முக்கிய பிரபலம் விலகல்

திருப்பத்தூர் மாவட்ட இந்திய தேசிய லீக் மாவட்ட செயலாளர் M. R. அப்ரோஸ் இன்று அக்கட்சியில் இருந்து அதிமுக முன்னாள் அமைச்சர் K C. வீரமணி தலைமையில் அதிமுகவில் இணைந்தார். இதனையடுத்து அவருக்கு சால்வை அணிவித்து கே.சி.வீரமணி வரவேற்றார். இந்திய தேசிய லீக் கட்சியின் மாவட்ட செயலாளர் விலகிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News August 16, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு ரோந்து போலீசார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (ஆக.15) இரவு 10 மணி முதல் இன்று (ஆக.16) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உட்கோட்ட போலிஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணிகள் ஈடுபட்டும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.
News August 15, 2025
திருப்பத்தூர்: விமானப்படையில் சேர ஆசையா?

திருப்பத்தூர் இளைஞர்களே அக்னிவீர்வாயு திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர ஆண்களுக்கு செப்.2,3 மற்றும் பெண்களுக்கு செப்.5,6 தேதிகள் தாம்பரம் விமானப்படை நிலையத்தில் உள்ள ஏர்மேன் தேர்வு மையத்தில் நேரடி ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. ஜன.2001-ஜூலை.2008க்குள் பிறந்தவர்களாகவும், 10,12th,டிப்ளோமோ முடித்தவர்களாகவும் திருமணம் ஆகாதவர்களாகவும் இருந்தால் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். <
News August 15, 2025
தேசிய கொடி ஏற்றி வைத்த மாவட்ட ஆட்சியர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் பகுதியில் உள்ள ஆயுதப்படை காவலர்கள் மைதானத்தில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர் இதில் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.