News September 12, 2025
திருப்பத்தூர்: மின்சார பிரச்சனையா? இதோ தீர்வு!

திருப்பத்தூர் மக்களே சமீப காலமாக மின்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின்வயர் அறுந்து விழுந்தலோ, டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிந்தலோ, எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழக அரசின் மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் ‘9498794987’ என்ற எண்ணில் உங்கள் வீட்டில் இருந்தே புகார் கொடுக்கலாம். SHARE பண்ணுங்க!
Similar News
News September 12, 2025
திருப்பத்தூர்: சிக்கிய பைக் திருடன்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா நரியம்பட்டு ஊராட்சி பகுதியில் நேற்று (செப்.11) பைக் திருடிய, மோட்டூர் பகுதியை சேர்ந்த லோகேஷ்(35) என்பவரை பொது மக்கள் பிடித்து உம்ராபாத் போலீஸ் நிலையத்தில் ஓப்படித்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். பல்வேறு இடங்களில் பைக் திருடியது தெரியவந்துள்ளது.
News September 12, 2025
ஆம்பூரில் ஆட்டோ டிரைவருக்கு கத்தி குத்து

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மேல் கிருஷ்ணாபுரம் பாவாடை தோப்பு பகுதியில் நேற்று (செப்டம்பர் 11) முரளி வயது (32) ஆட்டோ டிரைவரை அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த முரளி ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த ஆம்பூர் டவுன் போலீசார், கார்த்திக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 12, 2025
வாணியம்பாடி விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று(செப்.12) காலை 11 மணிக்கு நடைபெறவிருந்த விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டம், நிர்வாக காரணங்களால் மாலை 3:30 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. இக்கூட்டம் கோட்டாட்சியர் அஜிதா பேகம் தலைமையில் நடைபெறும். இதில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.