News March 30, 2024

திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி கடும் எச்சரிக்கை

image

திருப்பத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராய விற்பனை நடப்பதாக மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜானுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட தீவிர குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் மூன்று நபர்களை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் எச்சரித்துள்ளார்.

Similar News

News January 26, 2026

31 மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்!

image

ஜோலார்பேட்டை ஒன்றியம் பாச்சல் ஆயுதப்படை காவலர் பயிற்சி வளாகத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. இதில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற கலை திருவிழாவில் வெற்றி பெற்ற 31 மாணவ மாணவிகளுக்கு, மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

News January 26, 2026

திருப்பத்தூரில் 250 நாட்டுக் கோழிகள் இலவசம்!

image

திருப்பத்தூர் மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News January 26, 2026

திருப்பத்தூர்: ரயில் பயணம் செய்பவரா நீங்கள்..?

image

ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்வதற்காக இந்திய ரயில்வேயின் உதவி எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 1.பாதுகாப்பு உதவி எண்-182, 2.மருத்துவ அவசர உதவி எண்-138, 3.ரயில் பெட்டி சுத்தம்-58888, 4.புகார், கருத்து தெரிவிக்கும் உதவி எண்-1800-111-139, 5.ரயில்வே போலீஸ் (RPF) உதவி எண்-1512, 6.குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்-1098, 7.பெண்கள் பாதுகாப்பு உதவி எண்-181. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!