News October 17, 2024
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 6 ஒன்றியங்களிலும் வசிக்கும் விதவைப் பெண்கள், கணவரால் கைவிடப்பட்டவர் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 50 சதவீத மானியத்தில் 40 நாட்டுக் கோழி குஞ்சுகள் வழங்கப்படவுள்ளது. இந்த சலுகைகளை பெற பொதுமக்கள் தங்கள் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையை அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார்.
Similar News
News July 10, 2025
இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (ஜூலை 10) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
News July 10, 2025
திருமணத் தடை நீக்கும் முருக பெருமான்

திருப்பத்தூர் மாவட்டம் பசலிக்குட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மூலவராக அருள்பாலிக்கும் முருக பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால், திருமணத் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கல்யாணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!
News July 10, 2025
பேருந்தில் சில்லறை வாங்கவில்லையா? DON’T WORRY

பேருந்து பயணத்தில் ‘அப்றம் சில்லறையை வாங்கிக்கோங்கனு’ கன்டக்டர் சொன்ன நொடியில் இருந்து, மீதி சில்லறை கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பதற்றம் தொற்றிக்கொள்ளும். இனி அந்த கவலை வேண்டாம். ஒரு வேளை உங்களது மீது சில்லறையை வாங்காமல் இறங்கிவிட்டால் 18005991500-க்கு கால் பண்ணி உங்கள் டிக்கெட் விவரத்தை சொன்னால் போதும், உங்க காசை GPAY செய்து விடுவார்கள். மேலும் தகவலுக்கு(9445021303). *செம திட்டம் ஷேர் பண்ணுங்க*