News June 21, 2024

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

இந்திய விமானப்படையின் அக்னிவீர் தேர்வு அக்டோபர் 18ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு இணையதளம் வாயிலாக ஜூலை 8 முதல் விண்ணப்பிக்கலாம். ஜூலை 28ஆம் தேதி வரை இத்தேர்வுக்கு 03.07.2004 முதல் 03.01.2008 வரை பிறந்த திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். +2 மற்றும் அதற்கு இணையான 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 29, 2025

திருப்பத்தூர் மக்களுக்கு ஆட்சியர் ஓர் முக்கிய அறிவிப்பு!

image

திருப்பத்தூர் தாலுக்கா மடவாளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 30.08.2025 நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் ரத்தப் பரிசோதனை கண், காது, இசிஜி, எலும்பியல் மற்றும் இருதயம், பல் மருத்துவம் மற்றும் பல்வேறு பரிசோதனைகள் செய்ய உள்ளனர். முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்கள்.

News August 29, 2025

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து போலீசார்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் (இன்று ஆகஸ்ட் (29)இரவு) 10 மணி முதல் காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உட்கோட்ட போலிஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணிகள் ஈடுபட்டும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.

News August 29, 2025

திருப்பத்தூர் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட வார்டுகள் 17,28,30 பகுதிகளில் உட்பட்ட மக்களுக்காக இன்று (29) தனியார் திருமண மண்டபத்தில் பல்வேறு அரசு துறை சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, கலந்து கொண்டு மக்களின் மனுவைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு ஒப்புகைச்சீட்டினை வழங்கினார். மேலும் இந்த நிகழ்வில் துறை சார்ந்த அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

error: Content is protected !!