News February 12, 2026

திருப்பத்தூர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ், 2025-26 ஆம் ஆண்டிற்கான கூடுதல் ஒதுக்கீடு குறித்து விவாதிக்க பிப்-17 அன்று காலை 11:00 மணிக்கு சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இக்கூட்டத்தை தடையின்றி நடத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியர் க. சிவ சௌந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார். எனவே இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் கூறினார்.

Similar News

News February 17, 2026

திருப்பத்தூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377

2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500

3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090

4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098

5.முதியோருக்கான அவசர உதவி -1253

6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033

7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 17, 2026

திருப்பத்தூர்: தேமுதிக நிர்வாகிகளுக்கு அறிவிப்பு

image

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பில், நடைபெறவுள்ள 2026 தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக, திருப்பத்தூர் மாவட்டம் நிர்வாகிகள் விருப்பமனு அளித்தவர்களிடம், வரும் 20ம்‌ தேதி வெள்ளிக்கிழமை தேமுதிக தலைமை அலுவலகத்தில் (கேப்டன் ஆலயம்) நேர்காணல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 17, 2026

திருப்பத்தூர்: மாவட்டம் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

image

திருப்பத்தூர் மாவட்டம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தனது சமூக வலைத்தளம் பக்கத்தில், திருப்பத்தூர் மாவட்டம் காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர். அதில் வாகன் ஓட்டும் போது சட்டத்திற்கான அல்ல உங்கள் உயிர் பாதுகாக்கவே, தலை பாதுகாப்பு வாழ்க்கை பாதுகாப்பு என சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!