News October 22, 2025
திருப்பத்தூர் மாவட்டத்திற்கு ‘ORANGE ALERT’

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் தேவையின்றி வெளியே செல்லாமல் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News January 29, 2026
FLASH: ஆம்பூரில் பயங்கர விபத்து!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் கன்னிகாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (ஜன.29) அதிகாலை 5.30 மணிக்கு முன்னே சென்ற கார் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து ஆம்பூர் டவுன் போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் சற்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
News January 29, 2026
திருப்பத்தூர்: ரத்த வெள்ளத்தில் கிடந்த குடும்பம்!

ஆம்பூரை சேர்ந்த தம்பதி தயாளன் (62), தமிழ்ச்செல்வி (62). இவர்களது மகள் இறந்து விட்ட நிலையில் மருமகன் மற்றும் 3 பேர குழந்தைகளுடன் வாழ்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று வேலை முடிந்து தயாளன் வீட்டுக்கு வந்த போது தமிழ்ச்செல்வி மற்றும் 3 பேர பிள்ளைகள் கைகளில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இவர்கள் ஆம்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
News January 29, 2026
திருப்பத்தூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஜனவரி 28 இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


