News September 24, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (செப். 24) ‘உங்களுடன் ஸ்டாலின்’ நிகழ்ச்சி நடக்கிறது. வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, கந்திலி, நாட்றம்பள்ளி மற்றும் மாதனூர் வட்டாரங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் உள்ள ஜி.எம்.எம்.எஸ். பள்ளி, தனலட்சுமி திருமண மண்டபம், ஏ.ஜி.எம். திருமண மண்டபம், கே.ஆர்.டி. திருமண மண்டபம், சென்றாயசாமி கோயில் உள்ளிட்ட இடங்களில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
Similar News
News September 24, 2025
திருப்பத்தூர்: காவல்துறை புதிய அறிவிப்பு!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை இன்று தனது சமூக வலைத்தளத்தில் ஒரு விழிப்புணர்வு புகைப்படத்தை பதிவு செய்துள்ளது. அந்த புகைப்படத்தில் வாகனங்களில் அளவை விட அதிகமாக பொருட்களை ஏற்ற கூடாது என்று இருக்கிறது. சமீப நாட்களில் வாகன விபத்துக்கள் அதிகமாய் நடந்து வருவதால் வாகன ஓட்டிகள் பொதுமக்களுக்கு இடையூறாக இல்லாமல் இருக்க காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் இதை பின்பற்றாமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
News September 24, 2025
திருப்பத்தூர்: வங்கி அதிகாரி ஆக விருப்பமா? ரூ.80,000 சம்பளம்!

திருப்பத்தூர் மக்களே..வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) மூலம் கிராம வங்கிகளில் காலியாக உள்ள 13,217 காலியாக உள்ள Manager, Assistant Manager நிரப்ப அறிவிப்பு வெளியானது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 688 காலிப்பணியிடங்கள் உள்ளன. சம்பளமாக ரூ.35,000 முதல் 80,000 வரை வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வரும் செப்.28-க்குள், <
News September 24, 2025
திருப்பத்தூர்: மனைவிக்கு தெரியாமல் 2வது திருமணம்!

ஆம்பூர் தாலுகா வட புதுப்பட்டு ஊராட்சியில் (நேற்று செப்-23) பச்சகுப்பம் பகுதியை சேர்ந்த சுதன் குமார் வயது (34) கூலி தொழிலாளியின் முதல் மனைவி அனிதா வயது 30, இருவரும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமண செய்யத நபரை மகளிர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.