News May 10, 2024
திருப்பத்தூர் மாவட்டத்தில் 88.20 % தேர்ச்சி!

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் 88.20 % தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 84.80 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 91.63 % தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
Similar News
News February 14, 2026
திருப்பத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

திருப்பத்தூரில் இன்று(பிப்.14) திமுக வடக்கு மண்டல பூத் நிர்வாகி மாநாடு நடைபெற உள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார். முதல்வர் வருகையையொட்டி திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்களுக்கு நேற்று ரூ.5,000 வழங்கிய நிலையில் பெண்கள் ஒன்று திரண்டு நன்றியினை தெரிவித்தனர்.
News February 14, 2026
திருப்பத்தூர்: பெண் குழந்தைக்கு ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 14, 2026
திருப்பத்தூர்: சிறுமியை திருமணம் செய்த வாலிபர்!

ஜோலார்பேட்டை அடுத்த பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமியை ஜோலார்பேட்டை அருகே அச்சமங்கலம் சேர்ந்த வசந்தகுமார் (வயது 22) என்பவர் காதலித்து காதல் திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து சிறுமி கர்ப்பமான நிலையில் அரசு மருத்துவர் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் குழந்தை திருமணம் செய்த வசந்த குமார் மீது போலிசார் வழக்கு பதிவு செய்தனர்.


