News August 19, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து போலீசார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் (இன்று ஆகஸ்ட் 18)இரவு) 10 மணி முதல் காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உட்கோட்ட போலிஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணிகள் ஈடுபட்டும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News August 19, 2025
திருப்பத்தூர்: மோட்டார் சைக்கிள் விபத்தில் கால் முறிவு

ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் இவர் நேற்று தனது ஸ்கூட்டரில் பொன்னேரி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மண்டலவாடி கூட்டு ரோட்டில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டர் மீது மோதியதில் ஐயப்பன் கால் முறிவு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீஸ் விசாரித்து வருகின்றது.
News August 18, 2025
திருப்பத்தூரில் ஆக.22 அன்று மிஸ் பண்ணிடாதீங்க

திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வருகின்ற ஆக.22 காலை 10 மணி முதல் 1 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் கட்டடத்தில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04179-222033 வாயிலாக அலுவலக நாட்களில் தொடர்பு கொள்ளலாம். வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.
News August 18, 2025
திருப்பத்தூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

திருப்பத்தூர் மக்களே! ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களையும் வழங்கினால், இனி கவலை வேண்டாம். அது போல் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கின்றன. இது போன்ற பிரச்சனைகள் உங்கள் பகுதியில் நடந்தால் உடனே 1967(அ)1800-425-5901 அழைத்து புகார் அளிக்கலாம். <