News May 17, 2024

திருப்பத்தூர்: மழைக்கு வாய்ப்பு!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் திருப்பத்தூரில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News August 22, 2025

வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை விழிப்புணர்வு

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தனது சமூக வலைத்தளம் பக்கத்தில் பொதுமக்கள் தங்களது வாகனங்களில் செல்லும் பொழுது அசம்பாவிதங்களை தவிர்க்க, குன்றும் குழியுமாக உள்ள சாலையில் மெதுவாகவும் எச்சரிக்கையுடனும் வாகனம் ஓட்ட வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து உள்ளனர்.

News August 22, 2025

திருப்பத்தூர்: பத்திரம் தொலைந்தால்…இதை செய்யுங்க

image

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். தாலுகா அலுவலகத்திற்கு அலையாமல் வீட்டில் இருந்தபடியே <>இந்த லிங்க்<<>> மூலம் விண்ணப்பித்து பத்திர நகலை பெற முடியும். இந்த இணையதளம் மூலம் பத்திரம் மட்டுமல்லாமல் நிலம் குறித்த பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்ற ஆவணங்களையும் எளிதாக பெறலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News August 22, 2025

திருப்பத்தூர்: 10th பாஸ் போதும்; போலீஸ் வேலை

image

திருப்பத்தூர் இளைஞர்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து இன்று முதல் செப்.21 வரை விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!