News September 19, 2025
திருப்பத்தூர்: மழைக்காலத்தில் இது இருந்தால் போதும்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் தினமும் கனமழை பெய்து வருகிறது. மரம் முறிந்து விழுவது, மின்கம்பங்கள் சாய்வது போன்ற இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் சேதங்கள் தொடர்பாக, மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் நீங்கள் புகார் செய்யலாம். அவசர கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 என்ற எண்ணிலோ (அ) 04179 – 222111 என்ற எண்ணிலோ பொதுமக்கள் தகவல்கள் தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க!
Similar News
News September 19, 2025
திருப்பத்தூர் மாவட்டம் காவல்துறை அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று (19-09-25) மாவட்ட மக்களுக்கு செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி மழை காலங்களில் மக்கள் தாழ்வான பகுதிகள் மற்றும் தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளில் வாகனங்களை இயக்க வேண்டாம் என்றும், ஆறு குளம் போன்ற நீர் நிலை பகுதிகளுக்கு குழந்தைகளை தனியா குளிக்க செல்ல அனுமதிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தி அவசர தேவைக்கு காவல் துறையின் உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
News September 18, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

செப்டம்பர் 18 திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி என்னும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.
News September 18, 2025
ஆபத்தன இடங்களில் புகைப்படம் எடுக்க வேண்டாம்

திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று (18-09-2025) திருப்பத்தூர் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அதில், மாவட்ட மக்கள் ஆபத்தான இடங்களில் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்றும், அவ்வாறு செய்வதால் எதிர்பாராத அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும், இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.