News September 19, 2025

திருப்பத்தூர் மக்களே கனமழை எச்சரிக்கை!

image

தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (செப்.,19) கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை குறித்த புகார்களுக்கு 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்! கொஞ்சம் அலெர்ட்டாக இருங்க மக்களே

Similar News

News September 19, 2025

திருப்பத்தூர்: ரயில் டிக்கெட் BOOK பண்ண போறீங்களா??

image

திருப்பத்தூர் மக்களே! TAKAL டிக்கெட் முன்பதிவு செய்ய IRCTCல் ஆதார் எண் இணைப்பது எப்படின்னு தெரியலையா??

1. IRCTC இணையதளத்தில் (அ) IRCTC செயலியில் NEWUSERல் உங்கள் விவரங்களை பதிவு பண்ணுங்க

2. ACCOUNT -ஐ தேர்ந்தெடுத்து ஆதார் எண் பதிவிடுங்க.

3. உங்க போனுக்கு OTP வரும் அதை பதிவு செய்து இணையுங்க.

இனி டிக்கெட் முன்பதிவுக்கு நீங்க அதிகம் பணம் கொடுக்காதீங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க..

News September 19, 2025

திருப்பத்தூர்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News September 19, 2025

திருப்பத்தூர் மாவட்டம் காவல்துறை அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று (19-09-25) மாவட்ட மக்களுக்கு செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி மழை காலங்களில் மக்கள் தாழ்வான பகுதிகள் மற்றும் தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளில் வாகனங்களை இயக்க வேண்டாம் என்றும், ஆறு குளம் போன்ற நீர் நிலை பகுதிகளுக்கு குழந்தைகளை தனியா குளிக்க செல்ல அனுமதிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தி அவசர தேவைக்கு காவல் துறையின் உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!