News September 12, 2025
திருப்பத்தூர் மக்களுக்கு காவல் துறை எச்சரிக்கை

திருப்பத்தூர் மாவட்ட மக்களுக்கு இன்று (செப்.12) எஸ்.பி அலுவலகம் சார்பில் சமூக வலைத்தள பக்கத்தில் எச்சரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், தங்களின் இருசக்கர வாகனங்களை பொது இடங்களில் நிறுத்திச் செல்லும் போது அதிலுள்ள storage space களில் பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வைத்துச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற திருட்டு சம்பவம் நடைபெறுவதால் உஷாரா இருங்க. ஷேர் பண்ணுங்க.
Similar News
News September 12, 2025
பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்

திருப்பத்தூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சியாமளா தேவி உத்தரவின் பேரில் இன்று (12.09.2025) திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லூரியில் பெண்களுக்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி, உதவி ஆய்வாளர் சீதா பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
News September 12, 2025
திருப்பத்தூர்: பத்திரம் தொலைந்தால்… இதை செய்யுங்க

திருப்பத்தூர் மக்களே, நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். தாலுகா அலுவலகத்திற்கு அலையாமல் வீட்டில் இருந்தபடியே இந்த லிங்க் மூலம் விண்ணப்பித்து பத்திர நகலை பெற முடியும். இந்த <
News September 12, 2025
திருப்பத்தூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை (செப். 13) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது விநியோகத் திட்ட குறைதீர் சிறப்பு முகாம் அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெறுகிறது. இதில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புகைப்படம் பதிவு போன்ற திருத்தங்களை செய்யலாம். இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.