News January 13, 2026
திருப்பத்தூர்: பொங்கல் பரிசு வரலையா..?

திருப்பத்தூர் மாவட்ட மக்களே! பொங்கல் பரிசு வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, தரமாக இல்லையென்றாலோ 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். மேலும், பரிசு வாங்க ரேஷன் கடை திறந்திருக்கா எனத் தெரிந்துகொள்ள PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும்.( SHARE IT)
Similar News
News January 25, 2026
திருப்பத்தூர் மக்களே OTP வருதா? ALERT!

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம்.
News January 25, 2026
திருப்பத்தூரில் கொலை வெறி தாக்குதல்!

வாணியம்பாடி அடுத்த கொத்தக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரை முன்விரோதம் காரணமாக நேற்று (ஜன.24) இரவு மூன்று இளைஞர்கள் வீடு புகுந்து தாக்கி, வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி சென்றனர். இதில் காயமடைந்த ஏழுமலை, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, வாணியம்பாடி கிராமிய போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
News January 25, 2026
திருப்பத்தூர்: கை குழந்தையுடன் பெண் கதறல்!

பொன்னேரியை சேர்ந்தவர் அகிலா. இவரது கணவர் தியாகராஜன். கணவன் மனைவி இடையே பிரச்சனை காரணமாக அகிலாவை அவரது கணவர் வீட்டில் சேர்க்காமல் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கணவனுடன் சேர்த்து வைக்க கோரி திருப்பத்தூர் கோர்ட்டில் அகிலா வழக்கு தொடுத்துள்ளார். இந்நிலையில் கணவன் வீட்டின் முன் கை குழந்தையுடன் தனது 35 பவுன் நகையை மீட்டு தரக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.


