News November 16, 2024

திருப்பத்தூர் புதிய வாக்காளர்கள் எண்ணிக்கை

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் 936 புதிய வாக்காளர்கள், ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் 736 புதிய வாக்காளர்கள், ஜோலார்பேட்டை தொகுதியில் 661 புதிய வாக்காளர்கள், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் 978 புதிய வாக்காளர்கள் மொத்தம் 3,311 வாக்காளர்கள் விண்ணப்பித்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News March 2, 2026

ஜோலார்பேட்டை எம்எல்ஏ அறிக்கை

image

திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவுமான தேவராஜி வெளியிட்ட அறிக்கையில், திமுக சட்டசபை தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கருத்து கேட்பு கூட்டம் திமுக துணை பொதுச்‌ செயலாளர் கனிமொழி தலைமையில் நாளை (மார்.3) காலை 10 மணியளவில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஜேபிஎம் மஹால் நடைபெறுகிறது. இதில் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளார்.

News March 2, 2026

திருப்பத்தூர்: சொந்த வீடு கட்ட அரசு தரும் சூப்பர் OFFER!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 2, 2026

திருப்பத்தூர்: உடல் தூக்கி வீசப்பட்டு பலி

image

ஜோலார்பேட்டை அடுத்த பால்னாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவர் ஜோலார்பேட்டையில் இருந்து வீட்டிற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பால்னாங்குப்பம் கூட்டு ரோடு அருகே பின்னால் வந்த கார் சைக்கிள் மீது மோதியதில் முதியவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று (மார்.1) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

error: Content is protected !!