News April 23, 2025
திருப்பத்தூர்: பார் கோடை ஸ்கேன் செய்ய வேண்டாம்

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிமுகம் இல்லாத நபர்கள் ஆன்லைன் மூலம் உங்களுக்கு பணம் செலுத்துவதாக கூறி QR CODE-ஐ அனுப்பி ஸ்கேன் செய்ய சொன்னால் ஸ்கேன் செய்ய வேண்டாம். அவ்வாறு ஸ்கேன் செய்தால் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்படலாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் விபரங்களுக்கு 1930 என்ற எண்ணுக்கு டயல் செய்யலாம்.
Similar News
News November 5, 2025
திருப்பத்தூர்: முன்னாள் படை வீரர் குறைத்தீர்வு நாள்!

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 12.11.2025 அன்று பிற்பகல் 2 மணிக்கு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் க. சிவ சௌந்தரவல்லி தலைமையில் நடைபெறவுள்ளது. மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மனு அளித்து தீர்வு காணலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 5, 2025
திருப்பத்தூர் பெண்களின் கவனத்திற்கு!

திருப்பத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு, திருப்பத்தூர் காவல்துறை சார்பில் இன்று (நவ.5) ஒரு எச்சரிக்கை விழிப்புணர்வு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘பெண்கள் யாரேனும் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் அல்லது யாரேனும் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தால் உடனடியாக 1091, 181 என்ற எண்ணிற்கு அழைக்கவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 5, 2025
திருப்பத்தூர் மக்களே – இன்று இதை கண்டிப்பாக பண்ணுங்க!

ஐப்பசி பெளர்ணமி நாளான இன்று (நவ.5) மாலை 5 மணிக்கு மேல் உங்களின் வீடுகளிலோ அல்லது அருகாமையில் உள்ள கோயில்களிலோ 5,7,11,21,51 அல்லது 101 என ஒற்றைப்படை எண்ணிக்கையில் மண் அகல் விளக்குகளை ஏற்றுங்கள். இப்படி வழிபடுவது குடும்பத்திற்கு மன நிம்மதி மற்றும் சிறப்பு தரும். அதேபோல், இந்த விளக்குகளை குறைந்தது 2 மணிநேரம் எரியும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஷேர் பண்ணுங்க!


