News December 31, 2025
திருப்பத்தூர்: தொழில் தொடங்க ரூ.15 லட்சம் கடன்!

திருப்பத்தூர் மக்களே! நம்மில் பலரும் சரியான வேலை அமையாமல் அல்லற்பட்டு வருகிறோம். இந்த நிலையில்தான், வேலை தேடும் இளைஞர்களுக்கு உதவ தமிழ்நாடு அரசு UYEGP என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் 8ம் வகுப்பு படித்திருந்தால் தொழில் தொடங்க ரூ.15 லட்சம் கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 45 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு தகுதிப்படைத்தவர்கள் ஆவர். <
Similar News
News January 6, 2026
திருப்பத்தூர்: வீட்டில் திட்டியதால் வாலிபர் விபரீத முடிவு!

ஜோலார்பேட்டை அருகே சின்ன மூக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் பூவரசன். இவர் நேற்று (ஜன.4) இரவு பெற்றோர் கண்டித்ததால் கோபத்தில் வீட்டில் இருந்த எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால் வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணனை நடத்தி வருகின்றனர்.
News January 6, 2026
திருப்பத்தூர்: காய்கறி வியாபாரி வீட்டில் கைவரிசை!

ஜோலார்பேட்டையை அடுத்த சின்னமூக்கனூரை சேர்ந்த காய்கறி வியாபாரி சவுந்தர்ராஜன். இவர் நேற்று (ஜன.5) பணம் எடுக்க பீரோவை திறக்க முயன்றபோது பீரோ உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அதிலிருந்த 9½ பவுன் நகை மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 6, 2026
திருப்பத்தூர்: ஓடும் ரயிலில் தவறி விழுந்து வாலிபர் பலி

ஆம்பூர், மேல் ஆலத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடைய சுமார் 25 வயது தக்க வாலிபர் நேற்று ஈரோட்டில் இருந்து காட்பாடி வரை டிக்கெட் எடுத்து எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது ரயில் ஆம்பூர் அருகே மேல் ஆலத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே செல்லும் போது ஓடும் ரெயிலில் தவறி விழுந்து அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரயில்வே போலிசார் இறந்தவர் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


