News October 25, 2025

திருப்பத்தூர்: தீபாவளி ஆஃபர் கேட்டு அடி, உதை!

image

திருப்பத்தூர்: காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ஜவகர்(23). இவர் ஒசூரில் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு ஓர் ஜவுளிக் கடையில் புத்தாடை வாங்கிய அவர், ஆடைக்கு தள்ளுபடி கேட்டு உரிமையாளரிடம் அதிரடி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்த புகாரில் ஜவகரை திருப்பத்தூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.

Similar News

News January 29, 2026

FLASH: ஆம்பூரில் பயங்கர விபத்து!

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் கன்னிகாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (ஜன.29) அதிகாலை 5.30 மணிக்கு முன்னே சென்ற கார் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து ஆம்பூர் டவுன் போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் சற்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News January 29, 2026

திருப்பத்தூர்: ரத்த வெள்ளத்தில் கிடந்த குடும்பம்!

image

ஆம்பூரை சேர்ந்த தம்பதி தயாளன் (62), தமிழ்ச்செல்வி (62). இவர்களது மகள் இறந்து விட்ட நிலையில் மருமகன் மற்றும் 3 பேர குழந்தைகளுடன் வாழ்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று வேலை முடிந்து தயாளன் வீட்டுக்கு வந்த போது தமிழ்ச்செல்வி மற்றும் 3 பேர பிள்ளைகள் கைகளில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இவர்கள் ஆம்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News January 29, 2026

திருப்பத்தூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஜனவரி 28 இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!